என் மகளை கொன்ன உங்க யாரையும் சும்மா விட மாட்டேன்! 3 மாத கர்ப்பிணி அதிகாரியின் மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கொடுமை!!!
துவாரகாவில் பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம், வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 21-ம் தேதி நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு
துவாரகாவில் உள்ள தனது வீட்டில் நாசியா கானம் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையை தொடங்கினர். அவரது மரணம் தொடர்பான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கணவர், மாமியார் வீட்டினர் மீது குடும்பத்தினர் புகார்
நாசியா கானத்தின் குடும்பத்தினர், அவரது கணவர் மற்றும் மாமியார் வீட்டைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக காவல்துறையிடம் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
BNS பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதாவின் 85 மற்றும் 108 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசியா கானத்தின் மரணம் தொடர்பான சூழ்நிலைகள், குடும்பத்தினர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே மரணத்திற்கான காரணம் குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.