அட இது தெரியாம போச்சே.. இயக்குனர் அட்லீக்கு விரைவில் டாக்டர் பட்டம்.! 



sathyabama university announcement Doctorate for director atlee

இயக்குனர் அட்லீயை பாராட்டி டாக்டர் பட்டம் கொடுக்க இருப்பதாக சத்யபாமா கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, நயன்தாரா, சந்தானம், நஸ்ரியா உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜா ராணி. இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ இயற்றி வழங்கி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார். 

குவிந்த பாராட்டுக்கள் :

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில், ஷாருக்கானுடன் ஜவான் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் அட்லீக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது. இவர் மீது காபிகேட் சர்ச்சை இருந்து வந்தாலும், அவரது படத்தின் வெற்றி காரணமாக அவை கண்டு கொள்ளப்படவில்லை. 

இதையும் படிங்க: நடிகர் விஷாலுடன் டும் டும் டும்.! திருமண தேதியுடன் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகை.!


விரைவில்  கௌரவ டாக்டர் பட்டம் :

இந்நிலையில் அட்லிக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் ஜூன் 14ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டமானது வழங்கப்பட உள்ளது. அட்லீ சத்தியபாமா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் ஒன்றை தயாரித்து வருவதும், இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேடையில் வைத்து காதலியை முத்தமிட்ட விஷால்.. திருமணம் எப்போ தெரியுமா?.!