"வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா பாத்துப்பேன்" -  நடிகையுடன் திருமணம் குறித்து பேசிய விஷால்.!!



actor vishal speak about actress sai dhanshika with love

நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதை விஷால் உறுதிசெய்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் ரசிகர்களால் புரட்சி தளபதி என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ள விஷால், இதுவரை திருமணம் செய்யாமல் அது தொடர்பான அறிவிப்பை தள்ளிப் போட்டு வந்தார். 

15 வருட நட்பு :

இதனிடையே நேற்று சென்னையில் யோகி டா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது படத்தின் இயக்குனர் உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா காதலித்து வருவதாக கூறினார். இதனை தொடர்ந்து பேசிய நடிகை கடந்த 15 ஆண்டுகளாக நட்பு ரீதியாக தொடர்ந்த பழக்கம் தற்போது காதலாக மலர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேடையில் வைத்து காதலியை முத்தமிட்ட விஷால்.. திருமணம் எப்போ தெரியுமா?.!

காதலை உறுதி செய்த விஷால் :

இந்நிலையில் தனது காதல் மற்றும் திருமணம் தொடர்பாக பேசிய விஷால், "நானும் காதலில் விழுந்துள்ளேன். இதுவரை இவர் எனது பெஸ்ட் பிரண்டாக இருந்து வந்தார். நல்ல தோழியாக இருந்து வந்தார். தற்போது என்னில் பாதியாக இருப்பார். இதை எப்படி விவரிப்பது என தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இவரை வாழ்நாள் முழுவதும் இதே போல சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக நான் வைத்திருப்பேன்." என கூறினார்.

இதையும் படிங்க: அட இவரா?.. 4 மாதத்தில் திருமணமாம்.. விஷாலை திருமணம் செய்யும் பிரபல நடிகை?.. குஷியில் ரசிகர்கள்.!!