உடலுக்கு பல்வேறு நன்மையளிக்கும் கேரட் கீர்.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்து அசத்துங்கள்..!!



How to Prepare Carrot Kher

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கேரட்டில் கேரட் கீர் செய்வது குறித்து இன்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி
கேரட் - 3 
பாதாம் பருப்பு - எட்டு 
பால் பவுடர், உப்பு - சிறிதளவு 
சீனி - 2 தேக்கரண்டி .

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை பொடித்து கொள்ள வேண்டும்.

★பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, துருவிய கேரட்டை போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். தண்ணீர் வடித்து அந்த கேரட்டை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

★இதனை பாத்திரத்தில் போட்டு சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து, மேலே ஒரு தேக்கரண்டி நெய்  சேர்த்தால் உண்மையான கேரட் கீர் தயார்.