நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் வந்த தொகுப்பாளினி பிரியங்கா.! அவரது கணவர் செய்துள்ளதை பார்த்தீங்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பிரியங்கா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வசி கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பிரபல பப், கிளப்புகள் மற்றும் பெரிய திருமண நிகழ்ச்சிகளில் டிஜேவாக உள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்காவிற்கு கடந்த வாரம் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையிலும் தனது கணவரை காண தொகுப்பாளினி பிரியங்கா வீல் சேரில் விமான நிலையத்தில் சென்றுள்ளார். அந்த வீடியோவை அவரது கணவர் வசி "வந்துட்டாப்ல.. வந்துட்டாப்ல.." என்ற கேப்ஷனுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரியங்கா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீல் சேரில் வந்த பிரியங்காவை பார்த்து கணவர் என்ன செய்துள்ளார் பாருங்க! இணையத்தில் வைரலாகும் வீடியோ....
இதையும் படிங்க: கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!