கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன். கடந்த 2015 ஆம் ஆண்டு சினிமாவில் சகாப்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து மதுரவீரன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் படைத்தலைவன். அறிமுக இயக்குநர் அன்பு இயக்கிய இப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியனுடன் இணைந்து கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
மேலும் படைத்தலைவன் படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தையும் நடிக்க வைத்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படைத்தலைவன் திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் படைத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் நான்கு நாட்களில் ரூ.4.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
இதையும் படிங்க: கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??