நீ தாயா இல்ல பேயா! டயப்பரில் மலம் கழித்த 8 மாத குழந்தை! அதற்காக கோபமடைந்து தாய் செய்த கொடூர செயலை பாருங்க! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்...



mother-boils-baby-in-texas

அமெரிக்கா டெக்சாஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 21 வயதான ஜடோரியா ரெனே கிலீமன்ஸ் என்பவர், 8 மாத ஆண் குழந்தையின் தாயாக இருக்கிறார்.

குழந்தையின் தவறான நடவடிக்கைக்கு கோபமடைந்த தாய்

சம்பவம் நடந்த நாளன்று, 8 மாத குழந்தை தனது டயப்பரில் மலம் கழித்திருந்தது. இதை காரணமாக எடுத்துக் கொண்ட ஜடோரியா, நிதானம் இழந்து, தன்னுடைய குழந்தையை கொதிக்கும் நீரில் இட்டுவிட்டதாக கூறப்படுகிறது. குழந்தை துடித்துக் கொண்டு அலறி அழைத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தாமதமின்றி போலீசாருக்கு தகவல் வழங்கினர்.

குழந்தையை மீட்ட போலீசார்

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இதையும் படிங்க: குறைந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட முதல் 10 நாடுகள்! எந்தெந்த நாடுகள் தெரியுமா?

தலைமறைவாக இருக்கும் தாய் மீது போலீசார் தீவிர விசாரணை

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தற்போது தலைமறைவாக உள்ள ஜடோரியாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் சமூக வலைதளங்களில் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: பறக்கும் பாம்புகள் பற்றி தெரியுமா? இந்த வடிவத்தில் உடலை வளைத்தபின் பறக்கும்! அதைப்பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் இதோ..