பறக்கும் பாம்புகள் பற்றி தெரியுமா? இந்த வடிவத்தில் உடலை வளைத்தபின் பறக்கும்! அதைப்பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் இதோ..



flying-snakes-facts-asia-india

பொதுவாக பாம்புகள் பறக்குமா என்ற கேள்வி எழுவது வழக்கமான ஒன்று. பாம்புகள் பூமியில் பல்லாயிரக்கணக்கான வகைகளில் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான திறன்களைக் கொண்டுள்ளன.

பறக்கும் பாம்புகள் உண்மையா

பறக்கும் பாம்புகள் என்றால் அவை பறவைகளைப் போல் சிறகுகள் கொண்டு பறக்கின்றன என நம்மில் பலர் தவறாக நினைப்போம். ஆனால் உண்மையில், இவை மரங்களில் இருந்து மரங்களுக்கு சறுக்கி செல்லும் திறனைக் கொண்டவை.

பறக்கும் பாம்புகள்

பறக்கும் பாம்புகளின் செயல்முறை

இந்த பாம்புகள் மரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது, தங்கள் உடலை தட்டையான அமைப்பாக மாற்றிக் கொள்கின்றன. இந்த மாற்றம் அவற்றை சறுக்கி 30 மீட்டர் வரை பறக்கச் செய்யும். அவை J வடிவத்தில் உடலை வளைத்தபின் காற்றில் பறக்க ஆரம்பிக்கின்றன.

இதையும் படிங்க: Video: நடுரோடில் பிஞ்சு குழந்தையை இறக்கிவிட்டு சென்ற தந்தை! அழுதுகொண்டே தவழ்ந்து செல்லும் குழந்தை! மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி...

பறக்கும் பாம்புகள்

எந்த இடங்களில் காணப்படுகின்றன

இவை தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக வெப்பமண்டல காடுகள் போன்ற பசுமைமிக்க சூழலில் இவை அதிகமாக வாழ்கின்றன.

பறக்கும் திறனின் முக்கிய நோக்கம்

இந்த பாம்புகள் தங்கள் வேட்டைதன்மை மற்றும் பாதுகாப்புக்காக பறக்கும் திறனைப் பயன்படுத்துகின்றன. பூமியில் ஊர்ந்து செல்லும் வேகத்தைவிட, இது அவர்களுக்கு வேகமான நகர்வை வழங்குகிறது.

பறக்கும் பாம்புகள்

பாம்புகளின் உணவுமுறை மற்றும் விஷம்

இவை சிறிய அளவிலான விஷத்தன்மை கொண்டவை. பொதுவாக பூச்சிகள் மற்றும் சிறிய உயிரினங்களை இரையாகக் கொண்டும் வாழ்கின்றன.

 

இதையும் படிங்க: தந்தையை கத்தியால் 30 வினாடிகளில் 15 முறை கொடூரமாக குத்திய மகன்! இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சி..