தந்தையை கத்தியால் 30 வினாடிகளில் 15 முறை கொடூரமாக குத்திய மகன்! இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சி..



son-attacks-shop-owner-father-chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தின் பலோடாபஜார் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

குடும்பத்தில் நடந்த கொடூர தாக்குதல்

ஜூன் 17ஆம் தேதி, பலோட பஜார் பகுதியைச் சேர்ந்த நரேந்திர சிங் சாவ்லா என்பவரின் கடையில் வழக்கம்போல் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்த நிலையில், திடீரென அவரது மகன் அமர்ஜீத் பைக் மூலம் வந்து கத்தியால் குத்தும் வகையில் தாக்குதயியல் நடத்தினார். இது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது.

வெறித்தனமாக 30 வினாடிகளில் 15 முறை குத்தியது

அமர்ஜீத் தனது தந்தையை 30 வினாடிகளில் 15 முறை கத்தியால் குத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனிதனைக் கடித்த கொடிய விஷம் கொண்ட பாம்பு! அடுத்த 5 நிமிடத்தில் பாம்பு துடிதுடித்து நடந்த அதிர்ச்சி செயல்! அபூர்வமான சம்பவம்...

வேலை இழப்பே காரணம் என கூறப்படுகிறது

அமர்ஜீத் ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியர். வேலை இழந்ததற்கு தந்தையே காரணம் என குற்றம்சாட்டி, மதுபானம் அருந்திய நிலையிலேயே இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக தெரிகிறது. வேலை இழந்த பிறகு மனஅமைதி பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் போலீசு நடவடிக்கை

தற்போது நரேந்திர சிங் பலோடாபஜார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலை மிகவும் கவலைக்கிடமானது. சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, அமர்ஜீத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வைரல்

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மக்கள் மத்தியில் இது அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: நரிகளுக்கான தனி கிராமத்தை ஒதுக்கிக் கொடுத்த நாடு எது தெரியுமா? குளிர்காலத்தில் பனியால் மூடிய அழகிய நரிகளுக்கான மலைப்பகுதி!