குறைந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட முதல் 10 நாடுகள்! எந்தெந்த நாடுகள் தெரியுமா?

உலகில் குறைந்த கல்வியறிவு விகிதம் கொண்ட நாடுகள்
எழுத்தறிவு என்பது ஒரு நாட்டின் சமூக வளர்ச்சி மற்றும் தனிநபர் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது. ஒருவரிடம் எழுதவும் படிக்கவும் வரும் திறன் இல்லையெனில், அவர்களின் வாழ்க்கை வாய்ப்புகள் பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் இந்த திறன்கள் இருந்தால், வேலைவாய்ப்புகள் அதிகரித்து, மேம்பட்ட தொழில்கள் மற்றும் உயர்ந்த ஊதியங்களை பெற வழிவகுக்கும்.
இதனால் தான் உலகம் முழுவதும் உயர்தர கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் சில நாடுகள் கல்வியின் அடிப்படை கட்டங்களைப் பெற முடியாமல் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன.
எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள நாடுகள்
கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் கீழ்க்காணும் 10 நாடுகளும் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் வறுமை, உள்கட்டமைப்பு குறைபாடு, கல்விக்கான அணுகல் இல்லாமை மற்றும் நாட்டினுள் நிலவும் மோதல்கள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பறக்கும் பாம்புகள் பற்றி தெரியுமா? இந்த வடிவத்தில் உடலை வளைத்தபின் பறக்கும்! அதைப்பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் இதோ..
இடம், நாடு, எழுத்தறிவு விகிதம்
1. நைஜர் 19.10%
2.சாட் 27%
3. மாலி 31%
4.தெற்கு சூடான் 34.5%
5.ஆப்கானிஸ்தான் 37.3%
6. மத்திய ஆப்பிரிக்க குடியரசு 37.5%
7.சோமாலியா 41%
8.கினியா 45.3%
9.புர்கினா பாசோ 46%
10.பெனின் 47%
ஏன் கல்வியறிவு குறைகிறது?
இந்த நாடுகள் பெரும்பாலும் நிலையான அரசு ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக உள்ளக மோதல்களை சந்தித்து வருகின்றன. கல்விக்கான மேம்பட்ட கட்டமைப்புகள் இல்லாததால், குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
கல்வியறிவு என்பது தனிநபர் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகும்.
இதையும் படிங்க: Video: நடுரோடில் பிஞ்சு குழந்தையை இறக்கிவிட்டு சென்ற தந்தை! அழுதுகொண்டே தவழ்ந்து செல்லும் குழந்தை! மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி...