சண்டையில் கோபமடைந்து கணவன் மீது கொதிக்க கொதிக்க அதையெல்லாம் உடம்பில் ஊற்றிய மனைவி! இரவு முழுவதும் அறையில் பூட்டி வைத்து… கொடூர சம்பவம்!

பவானி மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த குடும்ப தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 38 வயதான மணீஷ் ரத்தோர் என்பவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோபத்தில் மனைவி கொதிக்கும் எண்ணெயால் தாக்கம்
வாக்குவாதத்தின் போது, மணீஷ் ரத்தோரின் மனைவி சரோஜ், கோபத்தில் கொதிக்கும் எண்ணெயும் வெந்நீரும் அவரது மீது ஊற்றி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் கைகள், கால்கள் மற்றும் வயிறு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தெரியவந்ததும் மருத்துவமனைக்கு அனுப்பம்
தாக்கிய பிறகு கணவரை அறையில் பூட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை இந்த சம்பவம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஜலவார் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: இன்ஸ்டா மோகத்தால் வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
போலீசார் விசாரணையில் தீவிரம்
போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை எழுத்துப்பூர்வ புகார் பெறப்படவில்லை என்றாலும், போலீசார் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
இந்த சம்பவம் ராம்நகர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்! வீட்டிற்கு போனதும் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்!