இன்ஸ்டா மோகத்தால் வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!



instagram-teen-girl-abuse-pocso-case-tamilnadu

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய வாலிபர் கைது

நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு வாலிபருடன் நட்பை வளர்த்திருந்தார். அந்த வாலிபர், ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரங்குடி பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் மாதேஸ்வரன் (வயது 21) என்பவராவார்.

இருவரும் கடந்த சில வாரங்களாக செல்போன் வழியாக தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தனர். இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணை

புகாரின் பேரில் மாயம் வழக்காக பதிவு செய்யப்பட்டு தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மொபைல் டேட்டா அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாதேஸ்வரனே அந்த சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 110 நாட்கள் விடுமுறை! வெளியான மகிழ்ச்சி செய்தி...

ராமநாதபுரத்தில் பாலியல் தொல்லை

பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், மாதேஸ்வரன் சிறுமியை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை வழங்கியது உறுதி செய்யப்பட்டது.

போக்சோ சட்டத்தில் கைது

இந்த சம்பவத்தின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மாதேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

இதையும் படிங்க: பொன்னாமராவதியில் பூட்டிருந்த வீட்டுக்குள் அரசு ஆசிரியையின் மர்மமான மரணம்! அதிர்ச்சி சம்பவம்....