Sunday Special: சுவையான பேபி கார்ன் 65 வீட்டிலேயே செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே சுட்டீஸ்க்கு செய்துகொடுத்து அசத்துங்கள்.!

Sunday Special: சுவையான பேபி கார்ன் 65 வீட்டிலேயே செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே சுட்டீஸ்க்கு செய்துகொடுத்து அசத்துங்கள்.!



How to Prepare Baby corn 65 Tamil

 

வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிட கேட்பார்கள். பாப்கார்னாக கொடுத்தால் சாப்பிடும் குழந்தைகள், சோளத்தை அப்படியே வேகவைத்து வழங்கினால் சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு பேபி கார்ன் 65 செய்து கொடுத்தால் சுவைத்து சாப்பிடுவார்கள். இன்று வீட்டிலேயே பேபி கார்ன் 65 செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 12,
மைதா மாவு - 2 மேஜை கரண்டி,
அரிசி மாவு - 3 மேஜை கரண்டி,
சோளமாவு - 1.5 மேஜை கரண்டி,
தயிர் - 5 கரண்டி, 
இஞ்சிபூண்டு விழுது - சிறிதளவு,
மிளகாய்தூள் - 1 மேஜை கரண்டி,
கரம் மசாலா - 1 கரண்டி,
எலுமிச்சை சாறு - சிறிதளவு,
கறிவேப்பில்லை - கையளவு,
உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.

health tips

செய்முறை: 
முதலில் எடுத்துக்கொண்ட பேபி கார்னை நீளமாக்க நறுக்கி, சிறுசிறு துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை நீரில் சேர்ந்து 2 நிமிடம் வரை கொதிக்கவைத்து எடுக்க வேண்டும். 

பின்னர் அகண்ட பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, தயிர், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு போன்றவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து கலவையாக மாற்ற வேண்டும். 

இந்த மசாலா கலவையுடன் பேபி கார்னை சேர்ந்து வானெலியில் தயாராக உள்ள சூடான எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான பேபி கார்ன் 65 தயார்.