வேர்க்கடலை சட்னி இப்படி செய்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்.! ட்ரை பண்ணி பாருங்க.!

இந்த வேர்க்கடலை சட்னியை செய்வது மிகவும் சுலபமான காரியம் தான். அதோடு சுவையாகவும் இருக்கும். தற்போது இந்த வேர்க்கடலை சட்னியை சுலபமாக எப்படி செய்வது? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வர மிளகாய் - 8
தேங்காய் துருவல் - ½ மூடி
வேர்க்கடலை - 100 கிராம்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வேர்க்கடலையை போட்டு வேர்க்கடலை கறுகாத அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வறுத்த வேர்க்கடலையை மறுபடியும் வறுக்க வேண்டாம். அதன் பிறகு மிக்ஸியில் தண்ணீர், புளி, வரமிளகாய், துருவிய தேங்காய், வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பின் அவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் மாற்றி, போதுமான அளவு உப்பு சேர்த்து, நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் எண்ணெய் சேர்த்து, ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் எண்ணெயை ஊற்றி கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் அத்துடன் கொஞ்சம் கருவேப்பிலையை சேர்த்து முன்பே அரைத்து வைத்துள்ள சட்னியில் போட்டு விடவும். இப்போது சுவையான வேர்கடலை சட்னி தயாராகிவிடும்.