நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும் காரசாரமான தக்காளி குருமா.! இந்த விதத்தில் செய்து பாருங்கள்.!

நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும் காரசாரமான தக்காளி குருமா.! இந்த விதத்தில் செய்து பாருங்கள்.!


how-to-make-delicious-tomato-kuruma

காரசாரமான சுவைமிக்க தக்காளி குருமா செய்வது எப்படி என்பது தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த தக்காளி குருமாவை சப்பாத்தி, தோசை, இட்லி உள்ளிட்டவற்றுக்கு மட்டுமல்லாமல், பிரியாணிக்கும் சிக்கன் கிரேவி போல சைட் டிஷ்ஷாக உண்ணலாம்.

மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள் :

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

பட்டை - 1

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

தேங்காய் -½ கப் 

Life styleகுருமா செய்ய தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மல்லித்தூள் - 2½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

தக்காளி - 6

கருவேப்பிலை - தேவையான அளவு

இடித்த பூண்டு - சிறிதளவு

வெங்காயம் -1

சாவித்திரி, கல்பாசி, பட்டை - சிறிதளவு

பிரியாணி இலை - 1

சீரகம் - ½ டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :

இந்த தக்காளி குருமாவை செய்வதற்கு, முதலில் மசாலா அரைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், ஜாவித்ரி, கல்பாசி, பட்டை பிரியாணி இலை, சீரகம் போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

Life styleஅடுத்தபடியாக கறிவேப்பிலை, இடித்த பூண்டு போன்றவற்றை சேர்த்து, அத்துடன் வெங்காயத்தையும் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்க வேண்டும் அதன் பின் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின் மசாலா பேஸ்ட்டை அத்துடன் சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேவையென்றால், மறுபடியும் உப்பு சேர்த்து குறைந்த அளவிலான வெப்பத்தில் வைத்து கொதிக்க விட வேண்டும். அதன்பின் கொத்தமல்லி இலையை அதில் போட்டு இறக்கி வைக்க வேண்டும். இப்போது சுவையான தக்காளி குருமா ரெடியாகிவிடும்.