விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
நடிகர் தனுஷின் குபேரா.. ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.! அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக 'ராயன்' திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் தற்போது 'இட்லி கடை' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தனுஷின் குபேரா
தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!
ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் ப்ரைம்
குபேரா படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஜுன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டிபோட்ட நிலையில் அமேசான் பிரைம் ரூ.50 கோடி கொடுத்து உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கலர் கலரா கவரும் வண்ணங்களில் உள்ள பாம்பு! ஒய்யாரமாக கையில் அமர்ந்து என்ன செய்து பாருங்க! பார்க்க தூண்டும் அழகிய காட்சி....