சைவ பிரியர்களுக்கு அற்புத உணவாகும் உளுந்தின் நன்மைகள்!



Health benefits of ulunthu

பொதுவாக சைவ பிரிவினர்களுக்கு புரதசத்தை அள்ளிக் கொடுக்கும் தானியங்களில் ஒன்றாக உளுந்து உள்ளது. அதன்படி உளுந்தில் புரதம், வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உளுந்தம் பருப்பை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

health tips

சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு அசைவம் சாப்பிடுவதற்கு நிகரான புரத சத்து உளுந்தில் நிறைந்துள்ளது. மேலும் குளிர்காலத்திற்கு தேவையான ஆற்றலை இதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் மலச்சிக்கல், ஆஸ்துமா மற்றும் பக்கவாதம் போன்ற நோய் உள்ளவர்கள் உளுத்தம் பருப்பை உணவாக எடுத்துக் கொள்வதால் நிரந்தர தீர்வு கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்து இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்துகிறது.

health tips

குளிர்காலத்தில் உளுந்தம் பருப்பை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலில் சூடு அதிகரிக்கிறது. குறிப்பாக திருமணமான ஆண்களுக்கு விரைப்புத்தன்மை, குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு உளுந்தம் பருப்பு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.