அந்த சமயத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்! கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்!

அந்த சமயத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்! கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்!



girls-should-do-at-periods-time

மாதவிடாய் என்பது அணைத்து பெண்களும் தங்கள் வாழ்வில் சந்திக்கக்கூடிய முக்கியமான ஓன்று. மாதவிடாய் ஏற்படும் முதல் மூன்று நாட்களில் பெண்கள் உடல் வலி, இரத்த போக்கு, மனநிலை என பல்வேறு பாதிப்புகளை சாதிக்கின்றனர்.

இதுபோன்ற சமயங்களில் பெண்கள் செய்யும் சில தவறுகள் நிலைமையை இன்னும் மோசமடைய செய்கின்றது.

1 . உணவை தவிர்த்தல்:
மாதவிடாய் காலங்களில் அதிக இரத்த போக்கு காரணமாக உடல் சோர்வாக இருக்கும், உடல் வலி, மன இறுக்கம் போன்ற காரணங்களால் நிச்சயம் சாப்பிட தோணாது. இதுபோன்ற சமயங்களில் உனவை தவிர்ப்பது பெண்களை மேலும் சோர்வடைய செய்யும். எனவே மாதவிடாய் காலங்களில் உணவை தவிர்க்காமல் சாப்பிடவேண்டும்.

health tips

2 . அதிக வேலை:
இதுபோன்ற சமயங்களில் அதிக வேலைகள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிக எடையுடைய பொருட்களை தூக்க கூடாது. இவ்வாறு செய்வது மேலும் இரத்த போக்கை அதிகரிக்கும்.

3 . நாப்கினை மாற்ற தவறுவது:
மாதவிடாய் காலங்களில் உடலில் ஏற்படும் சோர்வு காரணமாக நாப்கின் மாற்றுவதை கூட சில பெண்கள் செய்ய தவறுவது வழக்கம். இது மிகவும் தவறு. நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்றவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நாப்கின் மாற்ற தவறும் பட்சத்தில் நோய் கிருமிகள் வளர்ந்து நோய்த் தொற்றுகளும் உண்டாகலாம்.