Tanushree Dutta: 'ஆடையை அவிழ்த்துப்போட்டு ஆடச்சொன்னார்' விஷால் பட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு.!



Tanushree Dutta Alleges Director Asked Her to Undress During Film Shoot

நடிகை தனுஸ்ரீ தத்தா புதிய புயலை கிளப்பி இருக்கிறார். 

தமிழில் நடிகர் விஷால் நடித்து வெளியான தீர்த்த விளையாட்டுப்பிள்ளை படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா (வயது 41). இவர் இந்தியில் ஆஷிக் பனாயா ஆப்னே, குட்பாய் பேட் பாய் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் வீரபத்திரா படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக நடித்து இருந்தார்.

சர்ச்சைக்கு பிரபலம்:

நடிப்பை தாண்டி பாலிவுட் திரையுலகில் இவர் பரபரப்பான பேச்சுக்கு சொந்தக்காரர் ஆவார். ஒருசில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பதால் சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகை பரபரப்பை வைக்கும் மீ டூ விவகாரத்தில், நடிகர் நானே படேகர் மீது பகிரங்க குற்றச்சாட்டையும் முன்வைத்து இருந்தார்.

Tanushree Dutta

நடிகை வேதனை:

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு நடிகை தத்தா தனது சோஷியல் மீடியாவில் பதிவு வெளியிட்டு அழுதது பரபரப்பை உண்டாக்கியது. இந்த பதிவில் தனது வீட்டில் தான் துன்புறுத்தப்படுவதாகவும், கொலை மிரட்டல் வருவதாகவும் சொல்லி பரபரப்பை உண்டாக்கினார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனரின் மீது குற்றசாட்டை முன்வைத்துள்ளார். 

இயக்குனர் மீது பகீர் குற்றச்சாட்டு:

இந்த விஷயம் குறித்து அவர் கூறுகையில், "படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது இயக்குனர் தகாத முறையில் நடந்தார். ஆடையை கழற்றி நடனம் ஆட கூறினார். நான் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் எனக்கு ஆதரவாக இருந்ததால், இயக்குனர் என்னிடம் எதுவும் பேசவில்லை" என கூறினார். அந்த இயக்குனர் யார்? என்பது குறித்து தத்தா கூறவில்லை.