கர்ப்ப கால வயிற்று அரிப்புக்கு என்ன செய்யனும் தெரியுமா.? மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்.!Doctors advice for itching during pregnancy

தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு நிச்சயமாக ஒரு மகிழ்ச்சியான தருணம். அதேநேரம் சில சிக்கல்களும், அசௌகரியங்களும் கர்ப்ப காலத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும்.

Lifestyle

அப்படிப்பட்ட அசௌகரியங்களில் ஒன்று தான் கர்ப்ப காலங்களில் வயிற்றில் ஏற்படும் அரிப்பு. இதுகுறித்து மகப்பேறு நிபுணர் ப்ரதிமா தம்கே கூறுகையில், "ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தோல் நீட்சி போன்ற காரணங்களால் தான் கர்ப்ப காலங்களில் வயிற்றில் அரிப்பு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க தூய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். மேலும் நறுமணமற்ற ஹைபோஅலர்ஜெனிக்  மாய்ஸ்ட்சரைசரை தடவலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். வாசனையற்ற சோப்பை பயன்படுத்த வேண்டும்.

Lifestyle

கர்ப்ப காலத்தில் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவேண்டும். விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுங்கள். கடுமையான அரிப்பாக இருந்தால் உங்கள் மருத்துவரை உடனே அணுகவேண்டும்" இவ்வாறு டாக்டர் தம்கே கூறினார்.