#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவுகள் என்னென்ன தெரியுமா?.. இதனை தினமும் சாப்பிடுறீங்களா? உஷார்..!
நமது வாழ்நாட்களை ஆரோக்கியமாக கடக்க மிக முக்கியமாக பயன்படும் பொருட்களில் ஒன்று உணவு. உணவு இல்லாமல் நாம் இருந்தால் நமது உடல் சோர்விழந்து ஆரோக்கியம் ஆபத்தான நிலைக்குச் செல்லும்.
இன்றளவில் பல்வேறு விஷயங்களில் நாம் கோட்டை விடுவது என்ற அளவில், உணவு மற்றும் உடல் ஆரோக்கிய விஷயத்திலும் அதனையே கடைபிடித்து வருகிறோம். உடலுக்கு சத்துக்களை வழங்கும் பல காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
இதனைத்தவிர்த்து அன்றாடம் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. நாம் உடலுக்கு ஆரோக்கியமானதை தேடி சாப்பிடுவதை போல, உடலுக்கு ஒவ்வாததையும் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அந்த வகையில் பிரட், கொக்கோ கோலா, பெப்சி, பீட்சா, பரோட்டா, மையோனஸ், பிரெஞ்சு ப்ரைஸ், செயற்கையான சாக்லேட்டுகள், ஆல்கஹால், பர்கர், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடவே கூடாது.