விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
தட்டைப்பயறு சாப்பிடுகிறீர்களா?.. உடலுக்கு கிடைக்கும் அசத்தல் நன்மைகள்.!
Cowpea Benefits: தட்டைப்பயறு அல்லது காராமணி என அழைக்கப்படும் மாட்டு கடலையில் புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல்நலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
தட்டைப்பயறு நம் தினசரி உணவில் சேர்க்கக்கூடிய ஒரு சத்தான பயறு வகையாகும். இதனை தமிழில் காராமணி என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் கவ்பீ (Cow pea) என அழைக்கப்படும் இந்த பயறு, ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. தட்டைப்பயறில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.
தட்டைப்பயறில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து:
இதில் ஊட்டச்சத்து 100 கிராம், கலோரி 330 கிராம், புரதம் 25 கிராம், மாவுச்சத்து 60 கிராம், நார்ச்சத்து 10 கிராம், இரும்புச்சத்து 8 மில்லி கிராம், கால்சியம் 110 மில்லி கிராம் உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் தட்டைப்பயறில் எலும்பை வலிமையாக்கும் கால்சியம் நிறைந்து இருக்கின்றன. இதனால் பற்கள் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் குழந்தைகள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.
இதையும் படிங்க: அன்னாசி பழத்தில் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கும் பல நன்மைகள்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

நன்மைகள்:
கலோரியை வழங்கும் தட்டைப்பயிறு கார்போஹைட்ரேட் மற்றும் இரும்பு சத்துக்கு வழிவகை செய்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. ரத்தசோகை தொடர்பான பிரச்சனையையும் தடுக்கிறது. தட்டைப்பயிறு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், கொலஸ்ட்ரால் போன்றவை நிறைந்ததாகும். முதியோர்களுக்கு ஏற்படும் எலும்பு சிதைவு பிரச்சனையை சரிசெய்வதுடன் மூளை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
கர்ப்ப கால ஆரோக்கியம்:
தட்டைப்பயறில் நிறைந்திருக்கும் போலிக் அமிலம் கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இதனை எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களின் ரத்த சோகை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யவும் இது உதவுகிறது.
இதையும் படிங்க: தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்த பேரிச்சம்பழம் ஒன்று சாப்பிடுவதால் கொட்டிக்கிடக்கும் எக்கச்சக்க நன்மைகள்!