தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்த பேரிச்சம்பழம் ஒன்று சாப்பிடுவதால் கொட்டிக்கிடக்கும் எக்கச்சக்க நன்மைகள்!



soaked-dates-health-benefits-tamil

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடிப்படை உணவில்தான் தொடங்குகிறது. நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சிறிய மாற்றம் செய்தாலே, பெரிய உடல் நல நன்மைகளை பெற முடியும். அந்த வகையில், ஊறவைத்த பேரிச்சம்பழம் தினசரி உணவில் சேர்த்தால் உடலுக்கு பல்வேறு அற்புதமான பலன்களை வழங்குகிறது.

செரிமானம் மற்றும் வயிற்று ஆரோக்கியம்

தினமும் ஊற வைத்து சாப்பிடும் பேரிச்சம்பழம் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் கட்டுப்படுத்த உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் வாயு தொல்லையை குறைத்து, குடலை சுத்தமாக வைத்திருக்க இது முக்கிய பங்காற்றுகிறது.

இரத்த சோகை மற்றும் நினைவாற்றல்

பேரிச்சம்பழத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ரத்த சோகையைத் தடுக்கும். அதே நேரத்தில் மூளைச் செயல்பாடுகளை ஊக்குவித்து நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இதை தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது.

இதையும் படிங்க: அன்னாசி பழத்தில் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கும் பல நன்மைகள்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

பெண்களுக்கு கிடைக்கும் சிறப்பு நன்மைகள்

மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி, ஒழுங்கற்ற சுழற்சி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு பேரிச்சம்பழம் ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது. தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ஹார்மோன் சமநிலை மேம்பட்டு உடல் சோர்வு குறையும்.

எலும்பு வலிமை மற்றும் எதிர்ப்பு சக்தி

ஊறவைத்த பேரிச்சம்பழம் எலும்பு அடர்த்தி குறைபாட்டை நீக்க உதவுகிறது. மேலும் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது.

வாய் சுத்தம் மற்றும் பற்கள் ஆரோக்கியம்

இரண்டு பேரிச்சம்பழங்களை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரால் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள் பளபளப்புடன் மின்னுவதோடு, சுவாசத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

பலர் பேரிச்சம்பழத்தை அப்படியே சாப்பிட்டாலும், தினமும் 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது. தொடர்ந்து இவ்வாறு எடுத்துக் கொண்டால், உடல்நலம் மேம்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை எளிதாக கிடைக்கும்.