
Benefits of Arugampul
சாதாரணமாக வயல் வரப்புகளில் வளரும் அருகம்புல்லில் ஏராளமான மருத்துவகுணங்கள் உள்ளது. அருகம்புல்லின் வேரை காய வைத்து பொடி செய்து நல்லெண்ணெய் கலந்து தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் அண்டாது.
மாதவிலக்கு பிரச்னை உள்ளவர்கள் அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் குணமாகும். அருகம்புல் சூஸ் பெண்களுக்கு மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறை இதனை பருகிவந்தால் உடற்சூடு நீங்கும்.
அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்துமா,சளி,சைனஸ்,நீரிழிவு போன்றவை குணமாகும்.
அருகம்புல்லை அரைத்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். அருகம்புல் வேரை நீரில் சேர்த்து பொடிசெய்து கஷாயம் வைத்து குடித்தால் நெஞ்சுவலி நீங்கும்.
அருகம்புல்லை அரைத்து வாரத்திற்கு இரண்டுமுறை குடித்துவந்தால் உடலில் உள்ள பித்தம் நீங்கும். மேலும் உடலில் உள்ள வெப்பத்தை சீராக்கும்.
அருகம்புல் சாப்பிட்டுவந்தால், இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement