உலகம் லைப் ஸ்டைல் சமூகம்

சொந்த மகளை திருமணம் செய்துகொண்ட தந்தை..! மனைவி இருக்கும்போதே நடந்த சமபவம்..! மகள் வளர்ந்தபிறகு காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

bangladesh girl got married in 3 years old

அந்த பெண் கூறுகையில், எனது தந்தை எனக்கு 3 வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். அதன்பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் எனது தாய். நானும் அவர்களோடு தான் வசித்து வருகிறேன். 

எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை போல ஒரு கணவர் எனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர்தான் என் கணவர் என்ற செய்தி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தேன். ஆனால், என்னால் அது முடியவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
 

இதற்கு காரணம் வங்கதேசத்தில் ஒரு பழங்குடியின மக்களால் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் தான்.

அதாவது, ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவரை இழந்தால், இரண்டாவது திருமணத்தை அவர் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த விதவை பெண்ணிற்கு பெண் குழந்தை இருந்தால் அந்த குழந்தையும் அந்த ஆணைத்தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமாம். இந்த பரம்பரியதால் தான் மிட்டாமோனி என்ற அந்த பெண்ணிற்கு 3 வயதிலே அவருடைய வளர்ப்பு தந்தையுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த விஷயம் அவருக்கு தெரியாமலே இருந்துள்ளது.

இதே நிலைதான் அடுத்தடுத்த சந்ததிக்கும் தொடரும் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Advertisement