தமிழகம் லைப் ஸ்டைல் ஆன்மிகம்

இன்று ஆடி அமாவாசை! இன்றையதினம் செய்யவேண்டியது என்ன தெரியுமா?

Summary:

aadi ammavasai


இன்று மூதாதையார்களுக்கு பிடித்த நாளான ஆடி அம்மாவாசை. இன்றய தினம் மூதாதையார்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர்களுக்கு திதி கொடுத்து, அவர்களின் ஆசிகள் பெற்று வாழ்வில் சுபிட்சத்தை பெறுங்கள்.

மாதந்தோறும்  அமாவாசை தினம் வருவது வழக்கம். ஆனாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தது.   இன்றைய நாளில், இறந்த நம் முன்னோர்களுக்காக  விரதம் இருப்பது நல்லதொரு பலனை தரும். இதில் மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும்.

சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுத்துவிட்டு புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுத்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும்.

ஆடி அமாவாசை அன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பவானி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள். 

அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளை செய்ய வேண்டும். மேலும், அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவை படையலிட்டு தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். 


Advertisement