உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருக்கா? சிறுநீரக புற்றுநோய் அபாயம்.. உஷார் மக்களே.!
உடல் கொடுக்கும் ஒருசில எச்சரிக்கை சமிக்கைகள் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியவை ஆகும்.
உணவுப்பழக்கம்:
வாழ்க்கைமுறை, மாசுபாடு நிறைந்த சூழல், ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கம் காரணமாக உலகளவில் புற்றுநோய் என்பது அதிகரித்து வருகிறது. இவற்றில் சிறுநீரக புற்றுநோய் என்பது மிகவும் ஆபத்தானதாக கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பலாப்பழ கொட்டையில் மறைந்து கிடக்கும் நன்மைகள்.. அசத்தல் விபரம் இதோ.!
எச்சரிக்கை:
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் எளிதாக இருந்து, பின் நாளடைவில் தீவிரமாகும். நோய் முற்றியபின் சிறுநீரகம் சேதமாகும். அதன்பின்னரே நோயின் தீவிரம் உணரப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். உடல் அனுப்பும் ஒருசில எச்சரிக்கைகளை நாம் முன்கூட்டியே கவனிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கட்டிகள்:
சிறுநீரக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்போது இடுப்பின் பக்கவாட்டில் அல்லது அடிவயிற்றில் சிறிய கட்டி அல்லது வீக்கம் ஏற்படும். இரத்த சோகை, சளி, இருமல், உடலின் வெப்பநிலை உயர்வாக இருப்பது, தொடர் காய்ச்சல் ஆகியவையும் இதன் அறிகுறிகள் ஆகும்.

வலி:
கீழ் முதுகு பகுதியில் எந்த காயமும் இல்லாமல் விழா எலும்பு பகுதியில் மந்தமான வலி இருந்தால், பலரும் இதனை தசை வலி என நினைத்துக்கொள்வது உண்டு. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல கட்டிகள் வளர வலியின் தீவிரமும் அதிகமாகும். சிறுநீர் கழிக்கும்போது இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், இதுவே வெளிப்படையான சிறுநீரக புற்றுநோய்க்கான முதல் அறிகுறி ஆகும்.
எடை:
உணவு கட்டுப்பாடு தொடர்பான முயற்சிகள் அல்லது உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை திடீரென குறைவது புற்றுநோய் செல்களின் தாக்கத்தால் ஏற்படும். பசியின்மையும் ஏற்படும். இவற்றை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் அல்லது சோதனை செய்துகொண்டால் எந்த பிரச்னையும் இல்லை.
இதையும் படிங்க: லேட்-நைட்டில் பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்குதா? இதையெல்லாம் கவனிங்க பாஸ்.!