பள்ளி மாணவிக்கு முத்தமிட்டு ரீல்ஸ்.. ஆசிரியர் கண்டிப்பால் மாணவர் தற்கொலை.. உறவினர்கள் போர்க்கொடி.! 



Kanyakumari School Student Dies by Suicide After Teacher’s Reprimand Over Reel Video With Female Classmate

பள்ளி மாணவியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்டார்.  

பள்ளி மாணவர்: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி, குறத்தியறை பகுதியில் வசித்து வருபவர் விக்டர் தாமஸ். இவர் கூலித்தொழிலாளி ஆவார். தாமஸின் மகன் கவின் ஜெனில் (வயது 16). இவர் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் 8 ம் தேதி விடுமுறை நாளில் தன்னுடன் பயிலும் மாணவ-மாணவியர்களுடன் கன்னியாகுமரிக்கு பேருந்தில் சென்றுள்ளார். 

இதையும் படிங்க: குடும்ப பெண்கள், மாணவிகள் டார்கெட்.. மோசடி பணத்தில் கோடீஸ்வரன்.. யார் இந்த கேடி? 

முத்தம்: 

அச்சமயம், கவின் ஜெனில் மாணவி ஒருவருடன் பேசி முத்தம் கொடுத்த நிலையில், அதனை விடியோவாக எடுத்து ரீல்ஸ் விடியோவாக பதிவேற்றியதாக தெரியவருகிறது.  இந்த விஷயம் குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவரை கண்டித்து இருக்கின்றனர். கவினின் தாயையும் அழைத்து மகனின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி, மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பிவிடுவோம் என எச்சரித்துள்ளனர். 

kanyakumari

கண்டிப்பு: 

மகனின் செயலை அறிந்த தாயும் கவினை கடிந்துகொண்டுள்ளார். இதனால் மாணவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த கவின், வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு பாட்டியிடம் வெளியே செல்வதாக கூறிச் சென்றுள்ளார். 

தற்கொலை: 

ஆனால், வீட்டின் பின்வாசல் வழியாக வீட்டுக்குள் வந்தவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மாணவரின் தற்கொலைக்கு ஆசிரியர்களே காரணம் என கூறி போர்க்கொடி தூக்கி பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் செய்தனர். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: நல்லதுக்கு காலமில்லை..... பி.இ. பட்டதாரி இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! சிக்கிய கடிதத்தில் இருந்த அந்த ஒரு வரி.! கதறும் பெற்றோர்!!!