15 நிமிடங்கள் லிஃப்டில் தவித்த 8 வயது சிறுமி! சாவியிலும் திறக்காத கதவு! இறுதியில் துணிச்சலாக செய்த செயல்..... திக் திக் வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி, குடியிருப்பு அடுக்ககத்தின் லிஃப்டில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். சுமார் 15 நிமிடங்கள் லிஃப்டிற்குள் தனியாக இருந்த சிறுமி, பின்னர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெளியேறினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
15 நிமிடங்கள் லிஃப்டிற்குள் தவித்த சிறுமி
பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற சிறுமி, அடுக்ககத்தின் லிஃப்டில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட் பழுதடைந்து, கதவு திறக்காமல் சிறுமி உள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனால் பயந்துபோன அவர் உதவி கேட்டு அலறியுள்ளார்.
இதையும் படிங்க: நொடியில் நடந்த கொடூரம்.... அதிவேகத்தில் வந்த கார்.... தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியான இருவர்! பதறவைக்கும் சம்பவம்...!!!
சாவியாலும் திறக்காத கதவு
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் உடனடியாக லிஃப்ட் பகுதிக்கு ஓடிவந்தார். சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறக்க முயன்றும் உடனடியாக பலன் கிடைக்கவில்லை. இதனால் லிஃப்டிற்குள் இருந்த சிறுமி மேலும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தானாக கதவைத் திறந்து வெளியேறிய சிறுமி
ஒருகட்டத்தில் அச்சத்தைத் தாண்டி தைரியமாக செயல்பட்ட சிறுமி, லிஃப்ட் கதவை தனது கைகளால் பலமாக இழுத்துத் திறக்க முயன்றார். தொடர்ந்து முயற்சி செய்ததில் கதவு திறந்தது. இதையடுத்து அவர் பாதுகாப்பாக வெளியே வந்தார். மொராதாபாத் சிறுமி காட்டிய சமயோசித புத்தியும் துணிச்சலும் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த காட்சிகள் அடுக்ககத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது CCTV Video சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான சூழலில் பதற்றமின்றி செயல்பட்ட சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
'15 मिनट तक लिफ्ट में जिंदगी और मौत से जूझती रही मासूम लेकिन नहीं हारी हिम्मत'
— Raju Sharma journalist (@RajuSharmajour1) August 22, 2026
मुरादाबाद की एक सोसाइटी में स्कूल से लौटते वक्त अचानक लिफ्ट में 8 वर्षीय मासूम फंस गई. बच्ची तकरीबन 15 मिनट तक लिफ्ट में जिंदगी और मौत से जूझती रही. लेकिन मासूम ने हिम्मत नहीं हारी. बच्ची के चिल्लाने… pic.twitter.com/nMdKSiqGrv
இதையும் படிங்க: ஆண்டுக்கு 40 லட்சம் சம்பளம்... ஆனா அந்த மாப்பிள்ளை வேணாம்...! ராகுல் காந்தியை ரோல் மாடலாக.... இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு..!!!