லேட்-நைட்டில் பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்குதா? இதையெல்லாம் கவனிங்க பாஸ்.!
பிரியாணி மசாலா, அதில் சேர்க்கப்படும் பொருட்கள் செரிமானம் அடைய நேரம் ஆவதால் தேவையில்லாத உடல்நல சிக்கல் ஏற்படும்.
பிரியாணி:
இன்றளவில் பலருக்கும் பிடித்த உணவான பிரியாணி, உடலின் செரிமான மண்டலத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தும் உணவாகும். பிரியாணியில் இருக்கும் அதிக கலோரி, மசாலாக்கள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் இரவு நேரத்தில் பிரியாணி எடுத்துக்கொண்டால் நெஞ்சு எரிச்சல், வயிறு உப்பிசம், தூக்கமின்மை ஏற்படும்.
இதையும் படிங்க: தொடர் மலச்சிக்கலால் அவதியா? தினமும் காலையில் இதை மறக்காம பண்ணுங்க.!
சர்க்கரை அளவு:
பிரியாணியை தொடர்ந்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க காரணமாக அமைவது மட்டுமல்லாது, ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கும். நீரிழிவு, உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்போர் இரவு நேரத்தில் பிரியாணியை தவிர்ப்பது நல்லது. பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருப்பின், அதில் அளவை கடைப்பிடிப்பதும் நல்லது.

எப்போது தூங்கலாம்?
கட்டாயம் பிரியாணியை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், தயிர் பச்சடி நல்லது. சாப்பிட்டதும் உறங்காமல் நடைப்பயிற்சி செய்யலாம். இது செரிமானத்துக்கு உதவும். குறைந்தது உறங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு பிரியாணி சாப்பிடலாம்.
சிக்கல்கள்:
தாமதமாக இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவது செரிமான மண்டலத்தில் சிக்கலை ஏற்படுத்தும். பிரியாணியில் இருக்கும் கொழுப்பு, மசாலா, இறைச்சி வயிறை கனமாக்கி சிக்கலை உண்டாக்கும். பகல் நேரத்தைப்போல இரவு நேரங்களில் உடல் இயக்கம் இல்லாத காரணத்தால் செரிமானம் மந்தமாகும். நெஞ்சு எரிச்சல், வயிறு உப்பிசம் உண்டாகும்.
இதையும் படிங்க: அப்டியே பளபளபளன்னு.. உங்க வீட்டு டைல்ஸ் மின்ன வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!