இந்த விஜய் இருக்கும் வரைக்கும் திமுக-வுக்கு இனி இதுதான் நிலைமை! மேடையிலேயே வெடிகுண்டை தூக்கிப் போட்ட முதல்வர் விஜய்.. திமுக - அதிமுகவுக்கு ஓபன் சேலஞ்ச்..!!!



vijay-tarapuram-campaign-stalin-criticism-a68f63

தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துப் பேசியதை சுட்டிக்காட்டிய விஜய், அது மேடை நாடகம் போன்றது என விமர்சித்தார்.

கொளத்தூர் வாக்காளர்கள் குறித்து விஜய் விமர்சனம்

கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளின் காரணமாகவே கொளத்தூர் மக்கள் திமுகவை புறக்கணித்ததாக விஜய் தெரிவித்தார். இனிவரும் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துவிட்டு, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிலை திமுக தலைவருக்கு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் வியூகத்தை கையில் எடுத்த ஸ்டாலின்! ஸ்டாலின் இறக்கிய கடைசி நேர வெடிகுண்டு...! இனிதான் வெடிப்பால் தெரியும் வெற்றி...!!!

முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு திமுகவை அச்சமின்றி எதிர்த்து நிற்கும் ஒரே தலைவர் தான்தான் என்பதை மக்களும் அதிமுக தொண்டர்களும் அறிவார்கள் என்றும் விஜய் குறிப்பிட்டார். தங்கள் கட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு இருப்பதாகவும், ஆட்சியை மாற்ற நினைக்கும் எதிர்க்கட்சிகளின் எந்த முயற்சியும் பலிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமாவுக்கு பாராட்டு

தவெகவில் இணைந்த சத்தியபாமா குறித்து பேசிய விஜய், பதவியை தக்கவைத்துக்கொள்ளாமல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை முறையாக ராஜினாமா செய்த பிறகே கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். அவரது இந்த முடிவை நேர்மையின் அடையாளமாக குறிப்பிட்டு விஜய் பாராட்டினார்.

திமுக, அதிமுக மீது விஜய் குற்றச்சாட்டு

தவெகவின் தொடர் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுகவும் அதிமுகவும் இணைந்து பல்வேறு அவதூறுகளை பரப்பி வருவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். குறிப்பாக திமுக தரப்பில் தன்னை தரக்குறைவாக விமர்சிப்பதாகவும், ஒருமையில் பேசுவதற்காக சிலரை அக்கட்சியின் தலைவர் தூண்டிவிடுவதாகவும் அவர் கூறினார்.

தாங்கள் அரசியல் நாகரிகத்துடன் கண்ணியமான முறையில் கருத்துகளை முன்வைத்து வருவதாக தெரிவித்த விஜய், எதிர்தரப்பில் இருந்து தரமற்ற விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் அதைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மக்கள் தங்களை உயர்ந்த இடத்தில் அமர்த்துவார்கள் என்றும் அவர் தனது பிரசார உரையில் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க: வெளிநாட்டு பயணம் முடிந்த கையோடு இடைத்தேர்தலில் விஜய் எடுத்த அதிரடி முடிவு! பரபரக்கும் அரசியல் களம்...!!!