இன்பச் செய்தி! குடும்ப அட்டைதாரர்கள் யாருக்கும் ரேஷனில் பொருள்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது..! தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் பெறுவதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு 6 மாதங்களுக்கு மேலாக நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு அக்டோபர் 1, 2026 முதல் பொருட்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ தடை செய்யவோ கூடாது என அதிகாரிகளுக்கு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை... அனைத்து ரேஷன் கார்டுக்கும் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணிட்டாத்தீங்க...!!!
96.69 சதவீதமாக உயர்ந்த கைரேகை சரிபார்ப்பு
தமிழகத்தில் PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு தற்போது 96.69 சதவீதமாக உள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மே 10, ஆகஸ்ட் 2, 8, 9, 29 மற்றும் செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த கைரேகை சரிபார்ப்பு, செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி 96.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறப்பு முகாம்களின் வாயிலாக 4,49,663 PHH மற்றும் AAY பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், அடுத்த முறை நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லும்போது தங்களது கைரேகை தகவல்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கைவிரல் ரேகை சரிபார்ப்பு அல்லது கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் இந்தப் பதிவை விரைந்து மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலுவையில் உள்ள பயனாளிகளின் பதிவை முழுமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இனி இவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது....! உடனே செக் பண்ணிக்கோங்க... அரசு வெளியிட்ட அதிரவைக்கும் லிஸ்ட்..!!!