விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
செல்பி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தோழிகள்! காதல் தோல்வி காரணமா?
மும்பையில் அடுத்தடுத்த வீட்டில் தங்கி நீண்ட நாட்களாக தோழிகளாக இருந்து வந்த இரண்டு பதினேழு வயது சிறுமிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்போனில் செல்பி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியும் வாட்ஸப்பில் முகப்பு படங்களாகவும் வைத்துள்ளனர்.
மும்பை ஆரே பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அந்த இரண்டு இளம்பெண்களின் உறவினர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் ஒரு செல்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த செல்பியில் இரண்டு பெண்களும் கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஒரு உறவுக்கார பையனிடம் தாங்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன அந்த இளைஞர் போலீசாருக்கு தகவல் கொடுத்து ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்த போது அந்த சிறுமிகள் இல்லை. அவர்களுடைய பைகள், செல்போன்கள் மற்றும் அணிகலன்கள், செருப்புகள் அனைத்தும் கிணற்றுக்கு பக்கத்தில் கிடந்துள்ளது. இதனால் அந்த சிறுமிகள் இருவரும் கிணற்றில் விழுந்து இருக்கலாம் என சந்தேகித்து தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனர். பின்னர் கிணற்றில் தேடுகையில் இரண்டு சிறுமிகளும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து அந்த இளம் பெண்களின் பெற்றோர் கூறுகையில், "அவர்கள் இப்படி தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தது எதற்கு என்று எங்களுக்கு புரியவில்லை. அவர்கள் எப்பொழுதும் போலவே சந்தோஷமாக தான் இருந்து வந்தனர். அவர்கள் முகத்தில் எந்த கவலையும் இருப்பது போல் தோன்றவில்லை. இவர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளது எங்களால் நம்பவே முடியவில்லை" என கூறியுள்ளனர்.
மேலும் இதனை பற்றி போலீசார் விசாரித்ததில் தோழிகள் இருவரும் மற்ற இரண்டு இளைஞர்களை காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது. அந்த இரண்டு இளைஞர்களும் இந்த இளம் பெண்களிடம் நெருங்கி பழகுவதை சில காலங்களாக ஒதுக்கி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அந்தப் பெண்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அதே கிணற்றில் இதுவரை ஆறு பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. ஊர் மக்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த கிணற்றை மூடுவதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.