பட்டப் பகலில் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம்.!

பட்டப் பகலில் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம்.!


young-student-was-sexually-assaulted-police-searching-f

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மாணவி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அங்குள்ள மந்திர் பஜார் பகுதியில் அமைந்திருக்கும் வங்கிக்கு சென்று இருக்கிறார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து சென்ற இரண்டு மர்ம நபர்கள் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

Indiaமேலும் மாணவியை நிர்வாணமாக தங்கள் செல்போனிலும் படம் எடுத்துள்ளனர். இது தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Indiaவழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறது மேற்கு வங்க காவல்துறை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.