மகளை கிண்டல் செய்த 69 வயது முதியவர்.! கோபத்தில் தந்தை செய்த காரியம்.! பரிதாபமாக போன உயிர்.!



young man kille dold man

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சப்அர்பன் முல்தண்ட் பகுதியை சேர்ந்தவர் சலீம். 38 வயது நிரம்பிய இவருக்கு ஒரு மகள் உள்ளார். சலீமின் வீட்டில் 69 வயதான அப்துல் என்ற முதியவர் சமையல்காரராக வேலை வந்துள்ளார். அப்துல் தனது முதலாளியான சலீமின் மகளை அடிக்கடி கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்தநிலையில் தனது மகளை சமையல்காரர் அப்துல் அடிக்கடி கிண்டல் அடிப்பது சலீமிற்கு தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று சமையல் வேலை செய்துகொண்டிருந்தபோது அப்துல் வழக்கம்போல மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்துள்ளார். 

இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த சலீம் சமையல்காரர் அப்துலை சரமாரியாக தாக்கியுள்ளார் இதில், பலத்த காயமடைந்த அப்துல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, அப்துலின் உடலை வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மின்கம்பம் அருகே தூக்கிவீசிவிட்டு சென்றுள்ளார். 

இதனையடுத்து ரத்தகாயங்களுடன் சாலை ஓரத்தில் அப்துல் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்துலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக சலீமிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகளை அப்துல் அடிக்கடி கிண்டல் செய்ததால் அவரை அடித்து கொன்றதாக குற்றத்தை சலீம் ஒப்புக்கொண்டார்.