இந்தியா

தங்கச்சியை கர்ப்பமாக்கிய பெரியப்பா மகன்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

Summary:

கர்நாடக மாநிலத்தில் உள்ள தவணகெரே மாவட்டத்தை சேர்ந்த16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள

கர்நாடக மாநிலத்தில் உள்ள தவணகெரே மாவட்டத்தை சேர்ந்த16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, பெற்றோருடன் கூட்டுக்குடும்பத்தில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அந்த சிறுமியை பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்ததில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி மருத்துவர்கள், சிறுமியின் பெற்றோரிடம் கூறினர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தலையில் இடி விழுந்தாற்போல இருந்தது.

இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து அவர்கள் கர்ப்பம் குறித்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் சிறுமியின் பெரியப்பா மகனான 17 வயது சிறுவன், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை தொடர்பில் இருந்துள்ளார்.

மேலும், இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய பெரியப்பா மகனான 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். 


Advertisement