5 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.! வரிசையாக கிடக்கும் 6 சடலங்கள்.! ஷாக் வீடியோ.!women-suicide-with-his-five-daughters

சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், குடும்பச் சண்டையில் விரக்தி அடைந்த தாய் மற்றும் 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மற்றும் பெல்சோண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பலியான பெண்ணிற்கும் இவரது கணவருக்கும் குடும்பச் சண்டை இருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில்தான், தனது ஐந்து பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரயில் தண்டவாளப் பகுதிக்கு வந்து, அங்கே ரயில் வரும் போது, தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.