ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஏலூர் அருகே சோகம்!
ஏலூர் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் போலவரம் அருகே உள்ள பாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (38). இவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பாத்தூர் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக லட்சுமி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த லட்சுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், காயம் தீவிரமாக இருந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சைக்கோவை காதலித்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கை-கால்கள் கட்டி எரித்துக்கொலை.!