#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
ச்சீ.. கேவலமான செயல்..! சிறுவர்-சிறுமிகளை ஆபாசமாக., 2 பேர் போக்ஸோவில் கைது.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், துருவை கிராமத்தை சேர்ந்தவர் காந்திகுமார் (வயது 35). இவர் பால் வியாபாரியாக இருந்து வருகிறார். இவர் தனது தெருவில் வசித்து வரும் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதை வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவை தனது நண்பரான ஜானகிராமன் (வயது 25) என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறுவர்கள் விளையாடுவதை ஆபாசமாக சித்தரித்த ஜானகிராமன், சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி காந்திகுமார் மற்றும் ஜானகிராமனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.