ஆர்வமாக மணப்பெண்ணுக்கு இச்சுக்கொடுத்த மணமகன்; பஞ்சர் ஆக்கிய மணப்பெண் வீட்டார்:. கலவரமான கல்யாண வீடு.!uttar-pradesh-marriage-function-fight

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காபூர் டேகாட், அசோக் நகர் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது இருதரப்பு குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். 

முத்தம் கொடுத்த மணமகன்

புரோகிதர் முன்னிலையில் திருமண நிகழ்வுகள் நடந்த நிலையில், மாலை மாற்றிக்கொள்ளும் சமயத்தில் மணமகன் ஆர்வ மிகுதியில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். 

fight

இதையும் படிங்க: குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்; பதறவைக்கும் சம்பவம்.!

நொறுக்கியெடுத்த பெண் தரப்பு

இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண் வீட்டார், மணமகன் மற்றும் அவரின் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கவே, காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. 

இதனையடுத்து, காவல் நிலையத்தில் இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட, அதிகாரிகள் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பும் புகாரை வாபஸ் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கார் ஒட்டியதற்கு தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக ரூ.1000 அபராதம் விதிப்பு; பரிதவிப்பில் வாகன ஓட்டி.!