4 ஆண்டுகளாக பெற்றெடுத்த மகள்களை பலாத்காரம் செய்த கொடூர தந்தை: வெட்டியாக ஊர்சுற்றிய கேடுகெட்ட தகப்பனின் பதைபதைக்க வைக்கும் செயல்.!Uttar Pradesh Ghaziabad Father Raped Minor Daughters Along 4 Years

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் வசித்து வரும் 40 வயது நபருக்கு, 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தனது மகள்களை தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த விஷயம் குறித்து பள்ளி ஆசிரியர் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பெயரில் நடந்த விசாரணையில் அதிர்ச்சி உண்மை வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, சிறுமியின் தந்தையான 42 வயது நபரை அதிகாரிகள் கைது செய்தனர். 

கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் தொல்லையை அனுபவித்து வந்த சகோதரிகளில் ஒருவருக்கு, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், பள்ளிக்கும் சரிவர வருவதில்லை. இதனால் ஆசிரியர் மாணவிகளிடம் கேட்டபோது தந்தையின் கொடூர குணமாக தெரியவந்துள்ளது. 

வேலை வெட்டி இல்லாமல் மனைவியின் பணத்தில் ஊரை சுற்றி வரும் தந்தை, தனது மகள்களை பலாத்காரம் செய்து அவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிய சோகம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.