அடி தூள்.... சாதனை படைக்கிறாரா உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.? தற்போதைய நிலவரம் என்ன.?

அடி தூள்.... சாதனை படைக்கிறாரா உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.? தற்போதைய நிலவரம் என்ன.?



up election vote counting

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் களமிறங்கின. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று  காலை 8 மணி முதல் துவங்கியது.

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக ஆரம்பத்தில் இருந்து முன்னிலை பெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

இதன் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் சூழல் உள்ளது. உ.பி.யில் சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை எந்த ஒரு முதல்வரும் 2-வது முறையாக முதல்வர் பதவியில் அமரவில்லை. இதனை முறியடித்து யோகி ஆதித்யாந்த் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.