இந்தியா

பாவம் அந்த குடும்பம்!! தாலி கட்ட சில நிமிடம் முன் மணப்பெண் உயிரிழப்பு!! உடனே பெண்வீட்டார் செய்த வினோத காரியம்!!

Summary:

தாலி கட்ட சில நிமிடங்களுக்கு முன் மணமகள் உயிரிழந்தநிலையில் மணமகன் மணமகளின் தங்கைக்கு தாலி

தாலி கட்ட சில நிமிடங்களுக்கு முன் மணமகள் உயிரிழந்தநிலையில் மணமகன் மணமகளின் தங்கைக்கு தாலி கட்டினார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் சுரபி என்ற பெண்ணிற்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து அதற்கான வேலைகள் நடந்துள்ளது. இந்நிலையில் திருமண நாளும் வந்தநிலையில், அலங்காரத்துடன் மணமகள் தாலி கட்டிக்கொள்வதற்காக மணமேடையில் அமர்ந்துள்ளார்.

ஆனால் தாலி கட்ட சில நிமிடங்களுக்கு முன் மணப்பெண் சுரபி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து பதறிப்போன அவரது பெற்றோர், தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் எழவில்லை.  உடனே மருத்துவரை வரவைத்து சோதனை செய்துள்ளனர். சுரபியை சோதனை செய்த மருத்துவர், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பதறிப்போன அவர்கள், திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற நோக்கில், இறந்துபோன மணப்பெண்ணை ஒரு அறையில் வைத்துவிட்டு, அவரது தங்கை நிஷாவிற்கு மணப்பெண் அலங்காரம் செய்து, மணமகனுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 


Advertisement