இந்தியா

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு சிறுமிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

two young girl try suicide

கேரளாவை சேர்ந்த 2 சிறுமிகள் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களது செல்போனை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். 

போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த செல்போனில் இருந்த புகைப்படங்கள், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் போன்ற அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் சில சிறுவர்களுடன் சிறுமிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் மருத்துவ சோதனையில் இரு சிறுமிகளும் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் இந்த இரு சிறுமிகளும் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி வருவதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.

இந்த இரு சிறுமிகளில் ஒருவரை முண்டக்கயம் மற்றும் அதன் அருகாமை பகுதியை சேர்ந்த நான்கு நபர்கள் தங்கள் குடியிருப்பு மற்றும் விடுதிகளில் வரவழைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர். தற்போது இரு சிறுமிகளும் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களின் உடல் நிலை தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement