திருமணம் செய்து கொண்டால் பிரிந்து விடுவோம்.! பாசக்கார இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.!

திருமணம் செய்து கொண்டால் பிரிந்து விடுவோம்.! பாசக்கார இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.!


twin sister suicide

கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி. இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் மண்டியாவில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் இறுதி ஆண்டி டிப்ளமோ படித்து வந்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் வரன் தேடி வந்தனர். ஆனால் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை. திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விடுவோம் என இருவரும் கருதியுள்ளனர். 

இந்தநிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் வரன் தேடி வந்துள்ளனர். இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் தனித்தனி அறைகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரட்டை சகோதரிகள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருமணமானால் இருவரும் தனித்தனியாக பிரிந்துவிடுவோம் என கருதிய தீபிகாவும், திவ்யாவும் தற்கொலை செய்தது தெரியவந்தது.