அடேங்கப்பா..! ஒருநாளைக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா.? கேரள அரசு தகவல்.

அடேங்கப்பா..! ஒருநாளைக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா.? கேரள அரசு தகவல்.



Treatment for one COVID-19 patient costs Rs 25000 per day

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேமாக பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் செலவை அரசே கவனித்துவருகிறது. இந்நிலையில், ஒரு கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகிறது என்பது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது கேரளா.

நாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவாவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அதுவே நோயாளி சீரியசான கண்டிஷனில் இருக்கும்போது ஐசியூவில் வைத்து சிகிச்சை கொடுக்க நேர்ந்தால் வென்டிலேட்டர் செலவு கூடுதலாக ஆகும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50,000 வரை அரசுக்கு செலவாகிறது என கூறியுள்ளது.

corono

மேலும், கொரோனா டெஸ்ட் செய்ய 4,500 , குணமாகி வீட்டிற்கு சென்றாலும், தொற்று உறுதியாகி மருத்துவமனைக்கு வந்தாலும் ஆம்புலன்ஸ் செலவுகளையும் அரசே ஏற்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.1000 மதிப்பில் நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள், நோயாளிக்கு சத்தான உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் பானங்கள் அடிக்கடி வழங்கப்படுகிறது.

மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உடை ஒன்றுக்கு 500 முதல் 600 வரை செலவாகிறது. குறிப்பிட்ட 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பழைய உடை அழிக்கப்பட்டு, புது உடை கொடுக்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் ஒருநாளைக்கு 200 பாதுகாப்பு உடைகள் தேவை படுகிறது எனவும் கேரளா அரசு தெரிவித்துள்ளது.