நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா! எத்தனை நாள் நீட்டிக்கப்படும்! முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை..!

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா! எத்தனை நாள் நீட்டிக்கப்படும்! முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை..!



Today again modi ji speak about corona uranku for all prime ministers

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமையுடன் ஊரடங்கு முடிவும் நிலையில் அதனை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா என்பது குறித்து முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை செய்யவுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தி குறைத்து விடலாம் என்ற எண்ணிய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. எனவே இது தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் வீடியோ காலின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Prime minister

அதில் பெரும்பாலான தலைவர்கள் ஊரடங்கு நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது மோடி அவர்களிடம் நாட்டில் சமூக நெருக்கடி நிலை போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.

மேலும் ஏற்கனவே ஒரு சில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் மத்திய அரசின் எந்த அறிவிப்பும் வருவதற்கு முன்பாகவே ஒடிசா அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதில் கொரோனாவின் தாக்கம் குறித்தும், ஊரடங்கால் வரும் பிரச்சனைகளை குறித்தும், அடுத்ததாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைகளுக்கு பிறகு தான் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? எத்தனை நாள் நீட்டிக்கப்படும் என்பது போன்ற தகவல்கள் தெரியவரும்.