இந்தியா

மோடி 2.0: மீண்டும் பிரதமரான மோடி கையெழுத்திட்ட முதல் அரசாணை என்ன தெரியுமா?

Summary:

The first announcement of modi as second time pm

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமரான மோடி நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை விட்ட வீரர்களின் குழந்தைகள் நலன் குறித்த அறிக்கையில் முதல் கையெழுத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் பரபரப்பாக நடைபெற்று நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் பாஜக வென்றது. இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றார்.

குடியரசு தலைவன் தலைமையில் பல வெளிநாட்டு தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்கள், பாஜக எம்பிக்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என 8000 பேர் முன்னிலையில் பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பரதமராக கடந்த 30ஆம் தேதி மாலை பதவியேற்று கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று தனது பணியினை மீண்டும் தொடர்ந்த மோடி புதிய ஐந்தாண்டில் தனது முதல் அறிக்கையை நாட்டின் பாதுகாப்பிற்காக அர்பணித்துள்ளார். இதுவரை தீவிரவாத மற்றும் நக்சல்கள் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ மற்றும் போலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்த உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ஆண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையான ரூ.2000 யை ரூ.2500 ஆகவும், பெண்களுக்கு ரூ.2250 லிருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Advertisement