இந்தியா

வைரல் வீடியோ: திடீரென சரிந்துவிழுந்த மண் மேடு..! நொடியில் உயிர்தப்பிய நபர்..!

Summary:

That biker is the luckiest person viral video

சாலை  ஓரத்தில் இருந்த மண் மேடு திடீரென சரிந்து விழுந்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரவீன் கஷ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது மிகவும் சுவாரசியமான வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நபர் ஒருவர் மண் சரிவில் இருந்து தப்பிக்கும் வீடியோ ஒன்றினை தற்போது பகிர்ந்துள்ளார்.

சுமார் 27 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் இருக்கும் மண் மேடு திடீரென சரிந்து ஆற்று நீர்போல் பெருக்கெடுத்து சாலையை நோக்கி வருகிறது. அநேரத்தில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்க மண் சரிவு வேகமெடுக்கிறது. இதில் வாகனத்தை அங்கையே போட்டுவிட்டு அந்த நபர் ஓடியநிலையில் வாகனம் முழுவதையும் மண் சரிவு மூடுகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர்பிழைக்கிறார்.

மரங்களின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ள இது சிறந்த பாடம் என பிரவீன் கஷ்வான் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement