மண்புழுவுடன் சமைத்து வழங்கப்பட்ட சர்க்கரை பொங்கல்; கல்லூரி விடுதியில் அதிர்ச்சி சம்பவம்.!Telangana MREC Campus food unhealthy 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொம்பல்லி ரங்காரெட்டி மாவட்டம், டிடி செகந்திராபாத் பகுதியில் எம்.ஆர்.இ.சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 

மல்லாரெட்டி பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு என பிரத்தியேக விடுதியும் இருக்கிறது. 

இந்நிலையில், நேற்று இரவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி இருந்துள்ளது. மேலும், சர்க்கரை பொங்கல் ஒன்றிலும் மண்புழு இறந்து கிடந்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதி வளங்கத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.